தெலுங்கானா கிராமத்தை தத்தெடுத்த காஷ்மீர் பைல்ஸ் தயாரிப்பாளர்

இந்த வருட துவக்கத்தில் ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய காஷ்மீர் பைல்ஸ் மற்றும் தெலுங்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற கார்த்திகேயா-2 ஆகிய படங்களை தயாரித்தவர் பாலிவுட் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால். இவர் தற்போது தெலங்கானா மாநிலத்தில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள திம்மபூர் என்கிற கிராமத்தை தத்தெடுத்துள்ளார். இவர் நடத்தி வரும் சந்திரகலா அறக்கட்டளை மூலமாக இந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு எல்லாவித அடிப்படை வசதிகளையும் செய்துகொடுக்க தயாராகியுள்ளார்.

இவரது தந்தை தேஜ் நாராயணன் அவர்களின் 60வது பிறந்தநாளையொட்டி இதற்கான தத்தெடுப்பு விழாவை நடத்தியுள்ளார் அபிஷேக் அகர்வால். இதில் அனுபம் கெர், இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் தெலங்கானா அமைச்சர் கிஷன் ரெட்டியின் பிறந்த ஊர் தான் இந்த திம்மபூர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால்தான் இந்த கிராமத்தை முன்னேற்றும் விதமாக இதை தத்தெடுத்துள்ளாராம் அபிஷேக் அகர்வால்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.