காவல்துறையில் எல்லா நேரத்திலும் நேர்மையாக பணிபுரிவது சாதாரண விஷயம் அல்ல என்று, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
டிஜிபிக்கள் ஷகில் அக்தர், சுனில்குமார் சிங் ஆகியோர் இன்று ஓய்வு பெறுகின்றனர். இதையொட்டி சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இன்று அவர்களுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, “காவல்துறையில் சுனில் குமார் சிங்கும், ஷகில் அக்தரும் நேர்மையான அதிகாரிகளாக விளங்கினார்கள். எல்லா நேரங்களிலும் நேர்மையாக இருப்பது எளிதானது அல்ல. மேலும், ஷகில் அக்தர் காவல் துறையில் எப்போதும் முக்கியமான பொறுப்புகளை கையில் வைத்திருந்தவர். அவர், ஆபத்தான ஆப்ரேஷன்களில் ஈடுபட்டவர்” என தெரிவித்தார்.