காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த கவுதம் – மஞ்சிமா ஜோடி
நடிகர் கார்த்திக்கின் மகனாக மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனாக மூன்றாம் தலைமுறை நடிகராக சினிமாவில் மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். சீரான இடைவெளியில் படங்களில் நடித்துவரும் கவுதம் கார்த்திக் கடந்த 2018ல் முத்தையா இயக்கத்தில் தேவராட்டம் என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை மஞ்சிமா மோகன். அந்த படத்தில் நடித்ததில் இருந்து இருவரும் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர்.
அப்போது அவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. இதை உறுதி செய்யும் விதமாக அவ்வப்போது மஞ்சிமா குறித்து பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய தருணங்களில் கவுதம் கார்த்திக் அனுப்பும் வாழ்த்து செய்திகள் வித்தியாசமாக இருந்தன. இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது என்கிற செய்தி பரவியபோது அதை இவர்கள் இருவரும் மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை. இந்த நிலையில் இவர்கள் இருவருமே தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் தாங்கள் இருவரும் காதலிப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்து மிக ரொமான்டிக்கான சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.
கவுதம் கார்த்திக் கூறும்போது, “சரியான நபர் உங்கள் வாழ்வில் வந்தால் என்ன நடக்கும்? நீங்கள் அவரை பார்த்த நொடியில் இருந்து காதல் நிரம்பி, உங்கள் இதயத்தில் பட்டாம்பூச்சிகள் பறந்து செல்வது போல் இருந்தது என பெரும்பாலானவர்கள் சொல்வார்கள்.. ஆனால் எங்கள் பயணம் நிச்சயமாக வித்தியாசமானது, நாங்கள் எப்போதும் ஒருவரையொருவர் கேலி செய்வதன் மூலம் தான் தொடங்கினோம், எப்போதும் சச்சரவு செய்துகொண்டு, முட்டாள்தனமான விஷயங்களைப் பற்றி வாதிட்டோம்.. எங்கள் நண்பர்களால் கூட எங்கள் வாதங்களைத் தாங்க முடியவில்லை.
ஆனால் நீ நம்மிடையே ஒரு அழகான பந்தத்தை உருவாக்குகிறாய் என்பது எனக்கு தெரியாது. இந்த பந்தத்திற்கு முதலில் 'நட்பு' என்று பெயர் வைக்க முடிவு செய்தேன். கொஞ்ச நாள் கழித்து 'சிறந்த நண்பர்கள்' என்று பெயரிட்டேன். ஆனால் அதையும் விட பலமாக வளர்ந்தது… இதுவரை நான் உணராத ஒரு அமைதி இப்போது என் இதயத்தில் இருக்கிறது, நீ நமக்காக ஏற்படுத்திய பிணைப்பை விவரிக்க 'காதல்' என்ற வார்த்தை கூட போதுமானது என்று நான் நம்பவில்லை. உன்னுடன் என் பக்கத்தில் இருந்தால், வாழ்க்கை என் மீது வீசக்கூடிய எதையும் என்னால் எதிர்கொள்ள முடியும் என்பது எனக்குத் தெரியும். இந்த சிறப்பு பந்தத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ள நீங்கள் தேர்ந்தெடுத்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் உன்னை முழு மனதுடன் நேசிக்கிறேன்! நாம் ஒன்றாக சேர்ந்து நம் பயணத்தைத் தொடங்குவதற்கு என்னால் காத்திருக்க முடியாது” என்று உவகை பொங்க கூறியுள்ளார்.
அதேபோல மஞ்சிமா இந்த காதல் உருவான விதம் குறித்து கூறும்போது, “மூன்று வருடங்களுக்கு முன்பு நான் முற்றிலும் தொலைந்து போனபோது நீ ஒரு காவல் தேவதை போல என் வாழ்வில் வந்தாய். வாழ்க்கையைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றி, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பதை உணர உதவினாய்!! என் குறைகளை ஏற்றுக்கொள்ளவும், அடிக்கடி நானாக இருக்கவும் நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தாய். நான் உன்னை நேசிக்க சிறந்த விஷயம் என்னவென்றால், நான் யார் என்பதற்காக நீ என்னை எவ்வளவு நேசிக்கிறாய் என்பதுதான். நீ எப்போதும் எனக்கு பிடித்த எல்லாவற்றிலும் இருப்பாய்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்..
விரைவில் இவர்கள் திருமண அறிவிப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியாகலாம் என்று தெரிகிறது..