வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி:கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 25 சதவீதம் உயர்ந்து ரூ.9540 கோடியாக உள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,51,718 கோடி வசூலாகியுள்ளது. அக்டோபர் மாத வசூலானது, கடந்த ஏப்ரல் மாதம் வசூலான ரூ.1,67,540 கோடிக்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய தொகையாகும்.
அதில்
சிஜிஎஸ்டி – ரூ.26,039 கோடி,
எஸ்ஜிஎஸ்டி – ரூ 33,396 கோடி,
ஐஜிஎஸ்டி – ரூ.81,778 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ. 41,215 கோடி உட்பட)
செஸ்- ரூ.10,505கோடி ( பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ. 856 கோடி உட்பட) அடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய் வசூலுடன் ஒப்பிடுகையில், பல மாநிலங்களிலும் ஜிஎஸ்டி வருவாய் உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 25 சதவீதம் உயர்ந்து ரூ.9540 கோடியாக உள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement