புதுடெல்லி: நோக்கியா ஜி60 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போன் 5ஜி நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்லாந்து நாட்டின் ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் நோக்கியா போன்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் நோக்கியா தற்போது ஜி60 5ஜி ஸ்மார்ட்போனை களம் இறக்கியுள்ளது. சிறப்பு அம்சங்கள்:
- 6.58 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே
- கொரில்லா கிளாஸ் 5 புராட்டெக்ஷன்
- ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட்
- 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி
- ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்
- மூன்று ஆண்டுகளுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட்
- பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா
- முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கொண்ட கேமராவும் இடம் பெற்றுள்ளது
- 4,500mAh திறன் கொண்ட பேட்டரி
- 20 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
- இ-சிம் சப்போர்ட்
- டைப் சி யுஎஸ்பி போர்ட்
- வரும் 8-ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வர உள்ளது. இதன் விலை ரூ.29,999
- இந்த போனை முன்பதிவு செய்பவர்களுக்கு இலவசமாக நோக்கியா பவர் இயர்பட் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
The all new Nokia G60 5G with 50MP triple AI camera, high speed connectivity and years of hardware and software support.
Pre-book now and get Nokia Power Earbuds Lite worth ₹3,599 free.
Buy now: https://t.co/oQB4JitaQW#NokiaG605G #TomorrowisHere #Nokiaphones #LoveTrustKeep pic.twitter.com/9HlJxBA6cF