நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் 36 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்கள் விளாசினார்
73 ஓட்டங்கள் விளாசிய பட்லர் ஆட்டநாயகன் விருது பெற்றார்
உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
பிரிஸ்பேனில் இன்று நடந்த உலகக்கோப்பை டி20 போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக பட்லர் 73 ஓட்டங்களும், ஹேல்ஸ் 52 ஓட்டங்களும் எடுத்தனர்.
A captain’s knock 💪
Jos Buttler’s stunning 47-ball 73 earns him the @aramco POTM 👏 pic.twitter.com/vkvflhXqbF
— ICC (@ICC) November 1, 2022
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 28 ஓட்டங்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
அதனைத் தொடர்ந்து கைகோர்த்த கேப்டன் வில்லியம்சன், கிளென் பிலிப்ஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
நிதானமான ஆட்டத்தை வில்லியம்சன் வெளிப்படுத்த, மறுமுனையில் பிலிப்ஸ் அதிரடியில் மிரட்டினார்.
அணியின் ஸ்கோர் 119 ஆக இருந்தபோது இந்த கூட்டணியை ஸ்டோக்ஸ் பிரித்தார். அவரது பந்துவீச்சில் கேன் வில்லியம்சன் 40 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, பிலிப்ஸ் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்தார்.
அரைசதம் கடந்த பிலிப்ஸ் 62 ஓட்டங்களில் இருந்தபோது சாம் கரன் ஓவரில் அவுட் ஆனார்.
Twitter (@BLACKCAPS
)
சான்ட்னர், சோதி இருவரும் வெற்றிக்காக போராடினர். ஆனால் நியூசிலாந்து அணியால் 159 ஓட்டங்களே எடுக்க முடிந்ததால், இங்கிலாந்து அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
New Zealand need less than 50 now, but they have only three overs to do it! 😱#ENGvNZ | 📝: https://t.co/LTgE7VWHFc
Head to our app and website to follow the #T20WorldCup action 👉 https://t.co/76r3b7l2N0 pic.twitter.com/gsPVQCqoNK
— ICC (@ICC) November 1, 2022
இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ், சாம் கரன் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மார்க் வுட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
England ward off Glenn Phillips to go level on points with Australia and New Zealand in Group 1 of the #T20WorldCup 2022 🙌#ENGvNZ | 📝: https://t.co/LTgE7VWHFc pic.twitter.com/8474h9ZNNk
— ICC (@ICC) November 1, 2022