
ஆப்பிரிக்க பழங்குடியினருடன் நக்ஷ்த்திரா
நடிகை, தொகுப்பாளர் என பன்முகத்திறமையோடு சின்னத்திரையில் கலக்கி வருபவர் நக்ஷ்த்திரா நாகேஷ். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'தமிழும் சரஸ்வதியும்' தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் நக்ஷ்த்திரா தனது கணவர் ராகவுடன் ஜோடியாக ஆப்பிரிக்காவுக்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளார். அங்கே, கென்யாவில் உள்ள மசைமாரா கிராமத்திற்கு சென்றுள்ள நக்ஷ்த்திரா மற்றும் ராகவ் அங்கு வசிக்கும் ஆப்பிரிக்க பழங்குடியினருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.