கொழும்பு,
அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத அளவுக்கு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இதனால் அங்கு அரசு நிறுவனங்கள் பலவும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. அந்த வகையில் அரசுக்கு சொந்தமான விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கடும் நஷ்டத்தில் தடுமாறுகிறது. எனவே அந்த நிறுவனத்தின் பங்குகளை விற்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை தேர்தெடுக்கப்பட்ட முதலீட்டாளர்களிடம் விற்று, உரிமையை கைமாற்றுவதற்கான நடவடிக்கைகளை தொடங்க அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான மந்திரி சபை முறைப்படி ஒப்புதல் வழங்கியுள்ளது.
Related Tags :