குரங்கு அம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ளதால் சர்வதேச சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவல் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில்இ மறுபுறம் புதிய நோய் தொற்று பரவல் எண்ணிக்கை சில நாடுகளில் இன்னும் அதிகரித்து வருகிறது.
குரங்கு அம்மை நோய் பாதிப்பு 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் 70 ஆயிரம் பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாகின. இந்நிலையில்இ சர்வதேச பொது சுகாதார அவசர அச்சுறுத்தலாக குரங்கு அம்மை நோய் பரவல் இருந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பல நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய் பரவல் குறித்த அவசரக் குழுவின் 3 ஆவது கூட்டத்தில்இ உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவிக்கையில்இ ‘உலகளவில் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவினாலும்இ சில நாடுகளில் இந் நோய் குறைந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் பிராந்தியங்களில் சில நாடுகளில் நோய் தொற்று அபாயம் அதிகரித்து வருகின்றன. மேலும் சில நாடுகளில் குறைவாக பதிவாகியுள்ளது’ என தெரிவித்தார்.