பிரித்தானியாவில் 222 புலம்பெயர்ந்த சிறுபிள்ளைகள் மாயம்: கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி


பிரித்தானியாவில் 222 புலம்பெயர்ந்த சிறுபிள்ளைகள் மாயமாகியுள்ளதாக ஒரு அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. 

பெற்றோருடன் இல்லாமல் தனியாக வரும் புலம்பெயர்ந்த சிறுபிள்ளைகளை நடத்தும் விதம் குறித்தும் விமர்சனம் எழுந்துள்ளது. 

இந்த கோடையில் மட்டும், 1,322 புலம்பெயர்ந்த சிறுபிள்ளைகள் ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

அக்டோபர் மாதம் 19அம் திகதி நிலவரப்படி, அவர்களில் 222 சிறுபிள்ளைகள் மாயமாகியுள்ளார்கள் என்னும் ஒரு தகவல் வெளியாகி கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
 

பிரித்தானியாவில் 222 புலம்பெயர்ந்த சிறுபிள்ளைகள் மாயம்: கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி | 222 Children Put In Hotels

பெற்றோர் இல்லாமல் தனியாக வரும் இந்த பிள்ளைகள் நீண்ட கால காப்பகங்களில் தங்கவைக்கப்படுவதற்கு பதிலாக, தனியாக ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

உள்துறை அலுவலகம், முன்கூட்டியே சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காமலே இந்த பிள்ளைகளை ஹொட்டல்களுக்கு அனுப்பிவைப்பதாகக் கூறப்படுகிறது.

1,322 புலம்பெயர்ந்த சிறுபிள்ளைகள் அப்படி ஹொட்டல்களில் தங்கவைக்கப்படுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் மாதம் 19அம் திகதி நிலவரப்படி, அவர்களில் 222 சிறுபிள்ளைகள் மாயமாகியுள்ளார்கள் என்னும் அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

புலம்பெயர்ந்தோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதையே தனது முதல் கடமை போல எண்ணிக்கொண்டிருக்கும் உள்துறைச் செயலரான சுவெல்லாவோ, ஒரு குழந்தை ஹொட்டலிலிருந்து காணாமல் போகும் நிலையில், அவர்களைக் கண்டுபிடிப்பதற்காக உள்துறை அலுவலகம் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாக கூறிக்கொண்டிருக்கிறார்.

பிரித்தானியாவில் 222 புலம்பெயர்ந்த சிறுபிள்ளைகள் மாயம்: கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி | 222 Children Put In Hotels

ஆனால், சிறு பிள்ளைகள் தனியாக ஹொட்டல்களில் தங்கவைக்கப்படுவது சரியல்ல. இப்படி பிள்ளைகள் தனியாக ஹொட்டல்களில் தங்கவைக்கப்படும் நிலையில், காணாமல்போகும் பிள்ளைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவது கவலையை ஏற்படுத்துவதாக சிறுவர்கள் தொடர்பிலான அமைப்பு ஒன்றைச் சேர்ந்த உள்ளூர் அதிகாரியான Louise Gittens என்பவர் தெரிவித்துள்ளார். 

பிள்ளைகள் நிரந்தர தங்குமிடங்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் உடனடியாக திட்டம் ஒன்று தேவை என்று கூறுகிறார் அவர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.