உங்க ரேஞ்சுக்கு ஏன் வெள்ளி கவசத்தோட நிறுத்திட்டீங்க? ஓபிஎஸ்ஸை விளாசிய திண்டுக்கல் சீனிவாசன்!

அதிமுகவின் 51 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் பழனி சாலையில் திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அதிமுக கழக செயலாளர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், திரைப்பட நடிகையுமான விந்தியா,உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்

பேசியது:

தெய்வீகத் திருமகனார் முத்துராமலிங்க தேவருக்கு ஜெயலலிதா கொடுத்த தங்க கவசத்தை அணிவிப்பதற்கு நமக்கு உரிமை இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். குறுக்கு வழியிலே அதற்கான வேலைகளை செய்திருக்கிறார்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள். அதைப்பற்றி நாம் கவலைப்படவில்லை.

ஆனால் அம்மா அவர்கள் கொடுத்த தங்க கவசத்தை இந்த முறையும் எப்படியாவது தேவர் சிலைக்கு அணிவித்திட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி கொண்டிருந்தபோது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லிக் கொண்டு, தேவர் சிலைக்கு வெள்ளிக் கவசத்தை அணிவித்துள்ளார் துரோகி ஓ.பன்னீர்செல்வம்.

நீங்கள் கொள்ளையடித்த பணத்தில் வைர கவசத்தையே அணிவிக்கலாம். ஏன் வெள்ளி கவசத்தோடு நிறுத்தி கொண்டீர்கள்? தேவர் சிலைக்கு எந்த கவசத்தை அணிவித்தாலும், அது அம்மா கொடுத்த தங்க கவசத்துக்கு ஈடாகுமா? நீங்கள் என்ன தேவரின் வாரிசா? என்று திண்டுக்கல் சீனிவாசன் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி நாளில், பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் 13 கிலோ தங்க கவசம் அணிவிக்கப்படுவது வழக்கம். கட்சி இந்த முறை இபிஎஸ்,

அணி என ரெண்டுபட்டு இருப்பதால், இந்த முறை தங்க கவசத்தை அணிவிக்கும் பொறுப்பை ராமநாதபும் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக, தேவர் ஜெயந்தி நாளான அக்டோபர் 30 ஆம் தேதி, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் நேரில் அஞ்சலி செலுத்திய ஓபிஎஸ், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், தேவர் சிலைக்கு 10 கிலோ எடையுள்ள வெளளி கவசத்தை அணிவிப்பதாக அறிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.