ஐதராபாத்: காங்., எம்.பி., ராகுல் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பிரிவினை அரசியல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக ‘இந்திய ஒற்றமை பயணம்’ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மேற்கொள்ளும் பாதயாத்திரையின், 56வது நாளான இன்று(நவ.,02) நடிகை பூஜா பட் பங்கேற்றார்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான, 3,570 கி.மீ., துாரம், ‘ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரிலான நடை பயணத்தை காங்., – எம்.பி., ராகுல் சமீபத்தில் துவக்கினார். பின்னர் கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ராகுல்காந்தி நடைபயணத்தைத் தொடர்ந்தார். தெலங்கானா மாநிலத்தில் கடந்த 23-ம் தேதி ராகுல் காந்தி யாத்திரை நுழைந்தது. இதற்கிடையே தீபாவளியின் காரணமாக யாத்திரைக்கு மூன்று தினங்கள் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று(நவ., 02) 56வது நடைபயணம், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் இருந்து இன்று காலை யாத்திரை மீண்டும் காங்., எம்.பி ராகுல் துவக்கினார். அப்போது, நடிகையும் திரைப்படத் தயாரிப்பாளருமான பூஜா பட் சிறிது நேரம் கலந்து கொண்டு நடைபயணம் மேற்கொண்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement