ஒன்றரை வருடத்துக்குள் முடிச்சுடுவோம்.. முதல்வர் ஸ்டாலின் பேட்டி..!

ஒட்டுமொத்த தமிழகத்தையையும் அதிமுகவினர் சீரழித்துள்ளனர். அனைத்தையும் சரி செய்ய வேண்டுமென்றால் பல ஆண்டுகள் ஆகும். ஆனால், நாங்கள் ஒன்றரை வருடங்களுக்குள்ளேயே முடித்துவிடுவோம் என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி தொடங்கியது. பருவமழையின் முதல் மழைப்பொழிவு நாளை மறுதினம் (நவ.4-ம் தேதி) வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வட மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மழை மற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். வடகிழக்கு பருவமழை தொடர்பாக வரும் புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். அப்போது, அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வந்த வீடியோ கால் அழைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்வர், “வட சென்னையில் தண்ணீர் தேங்கி இருப்பதாக புகார் வந்திருக்கிறது. தொடர்ந்து அதனை அப்புறப்படுத்தி வருகிறோம். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் சென்னையை மட்டுமல்லாது தமிழகத்தையும் அதிமுகவினர் சீரழித்துள்ளனர். அனைத்தையும் சரி செய்ய வேண்டுமென்றால் பல ஆண்டுகள் ஆகும். ஆனால் நாங்கள் ஒன்றரை வருடங்களுக்குள்ளேயே முடித்துவிடுவோம் என நம்பிக்கை உள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.