ஷாரோனும், கிரீஷ்மாவும் கணவன் மனைவி போல் ரகசியமாக குடும்பம் நடத்தியுள்ளனர்
தனது குடும்பத்திற்கு தெரியாமல் பார்த்துக் கொண்ட கிரீஷ்மா, காதலரின் நம்பிக்கையை பெற தாலி கட்டிக் கொண்டுள்ளார்
கேரளா இளம்பெண் கிரீஷ்மா, காதல் கணவரை ஷாரோன் தன்னை மிரட்டியதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
கேரளாவின் பாறசாலையில் இளம்பெண் கிரீஷ்மா தனது காதல் கணவரை விஷம் வைத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொலிஸார் விசாரணையின் போது முதலில் தான் கொலை செய்யவில்லை என்று கூறிய கிரீஷ்மா, பின்னர் திட்டமிட்டு கொன்றதாக ஒப்புக் கொண்டார்.
அவரிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் மேலும் சில அதிர்ச்சிகர தகவல்களை கூறியுள்ளார்.
அவரது வாக்குமூலத்தில், ஜாதகத்தில் முதல் கணவர் இறந்துவிடுவார் என்று ஷாரோனிடம் கூறியுள்ளார் கிரீஷ்மா. ஆனால் ஷாரோன் அதனை நம்பவில்லை.
பின்னர் அவருடன் எடுத்துக் கொண்ட அந்தரங்க புகைப்படங்களை செல்போனில் இருந்து அழிக்க வேண்டும் என்று கிரீஷ்மா நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது எனக்கு நீ கிடைக்கவில்லை என்றால் யாருக்கும் கிடைக்க விட மாட்டேன் என்றும், புகைப்படங்களை அழிக்க முடியாது என்றும் ஷாரோன் மிரட்டியுள்ளார்.
அதன் பின்னரே தனது கொலை திட்டத்தை அரங்கேற்றும் முடிவை கிரீஷ்மா எடுத்துள்ளார். அதன்படி ஷாரோனை சமாதானப்படுத்திய அவர், விஷம் கலந்த கஷாயத்தை குடிக்க வைத்து, பின் குளிர்பானத்தையும் குடிக்க வைத்துள்ளார்.
இதில் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட ஷாரோன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.