”குஜராத்தில் 2.5% வாக்குவங்கி வைத்திருந்த பாஜக மோடியின் உழைப்பால் 40% ஆக மாறியது”-அண்ணாமலை

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 120 தொகுதிகளில் திராவிட கட்சிகளே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
புதிய அரசியல் தலைவர்களாக உருவாக்குதல் தொடர்பான அரசியல் தலைமைத்துவம் மற்றும் சமூக தலைமைத்துவம் குறித்த பயிற்சி முகாம் தனியார் அமைப்பு சார்பில் சென்னை, தியாகராஜா நகரில் இன்று நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமின் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினார்.
அரசியலில் தலைவராக உருவாவதற்கு தலைமை பண்பு என்பது இன்றியமையாத ஒன்றாகும். அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து செல்வது, அனைத்து தரப்பு மக்களுக்காகவும் சிந்திப்பதும் முக்கியமானதாகும்.
image
காங்கிரஸ் ஆளும் மாநிலமாக இருந்து வந்த குஜராத்தில் பாஜக வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் நரேந்திர மோடி. குஜராத்தில் நரேந்திர மோடி கட்சி பொறுப்புக்கு வரும்போது அங்கு பாஜக 2.5 சதவீதம் மட்டுமே வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால் தொடர்ந்து திட்டமிட்டு பணியாற்றியதன் பயனாக தற்போது நாடு முழுவதுமே பாஜக 40% அளவுக்கு வழக்குகளை கொண்டுள்ளது. அவர் குஜராத்தில் கட்சி பணி ஆற்றும் போது தேடித்தேடி கண்டெடுத்த தலைவர்கள் தான் தற்போது பல்வேறு பொறுப்புகளிலும், பதவிகளிலும் இருந்து வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரையில் 234 தொகுதிகளில் 64 தொகுதிகளில் திராவிட கட்சிகள்தான் மாறி வெற்றி பெறும்.‌ இதுதான் கடந்த 5 தேர்தல்களில் நிலையாகும். ஏறத்தாழ 120 தொகுதியில் வரையிலே திராவிட கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. மீதம் உள்ள 100 தொகுதிகளில் தான் பிற கட்சிகள், வளரும் கட்சிகள் வெற்றி பெற போட்டி போடும் நிலை இருக்கிறது. நல்ல தலைவர்கள் உருவாகும் போது கட்சி வளர்ச்சி பெறும்.
image
நல்ல தலைவர்கள் தான் கட்சியின் வளர்ச்சிக்கு தேவையாகவும் இருக்கிறார்கள். சாதாரண நிலையில் உள்ள நபர் யாராவது தவறு செய்தால் பொதுமக்கள் பெரிதுபடுத்த மாட்டார்கள். ஆனால் அரசியலில் இருப்பவர்கள் தவறு செய்தால் அதனை பொதுமக்கள் ஏற்க மாட்டார்கள். அரசியல் தலைவராக உருவாக்க தலைமை பண்புடன் பிற தகுதிகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.
இதையும் படியுங்கள் – சென்னையில் எங்கே தேங்குகிறது மழை நீர்? சிசிடிவி வைத்து கண்காணிக்கிறது மாநகராட்சி! Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.