1993ம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவில் 54 பத்திரிகையாளர்கள் கொலை: யுனெஸ்கோ அமைப்பு தகவல்

புதுடெல்லி: கடந்த 1993 முதல் தற்போது வரை இந்தியாவில் 54 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 2ம் தேதியை (இன்று) ‘பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களின் தண்டனையிலிருந்து விலக்குவதற்கான சர்வதேச தினம்’மாக அறிவித்தது. யுனெஸ்கோ அமைப்பின் தரவுகளின்படி, கடந்த 1993ம் ஆண்டு முதல் தற்போது வரை உலகம் முழுவதும் 1,564 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 2011 முதல் 2021ம் ஆண்டுக்கு இடையில் 956 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இதே காலகட்டத்தில் 2,653 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒவ்வொரு நான்கு நாளுக்கு ஒரு பத்திரிகையாளர் கொல்லப்படுவதும், மூன்றாவது நாளுக்கு இரண்டு பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். கடந்தாண்டு மற்றும் இந்தாண்டில் மட்டும் கொல்லப்பட்ட  பத்திரிகையாளர்களில் 11 சதவீதம் பேர் பெண்கள்; 2020ல் 6 சதவீதமாக இருந்தது.  

கொரோனா காலத்தில் 2020 மார்ச் முதல் இந்தாண்டு பிப்ரவரி வரை சுமார் 2,000  பத்திரிகையாளர்கள் கோவிட் நோயால் இறந்துள்ளனர். இந்தியாவை பொருத்தமட்டில் கடந்த 1993ம் ஆண்டு முதல் தற்போது வரை (2022 அக்டோபர்) 54 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 12 பேரும், பீகாரில் 9 பேரும் கொல்லப்பட்டனர் என்று தரவுகளில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.