சென்னை மழை… ஸ்கோர் செய்த ஸ்டாலின்… சைலன்ட் மோடுக்கு போன அண்ணாமலை!

பிரதான சாலைகளிலேயே மழைநீர் வெள்ளமாய் தேங்கி நிற்பது, பொது போக்குவரத்து முடங்கும் அளவுக்கு சுரங்கப்பாதைகள் நீரிவ் மூழ்குவது, மழை வெள்ளம் சூழ்வதால் தாழ்வான இடங்களில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகள் குட்டித் தீவாய் மாறிப் போவது, அறிவிக்கப்படாத மின்வெடடு என பருவமழை காலத்தில் தமிழகத்தின் பிற பகுதிகளைவிட தலைநகர் சென்னை பெரும் பாதிப்புகளை சந்திப்பது வழக்கம்.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்திலும் மழை சூழ் நகரமானது சென்னை. இதனால் ஆளுங்கட்சியான திமுக மீது அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சன கணைகளை தொடுத்திருந்தன. அதற்கு, ‘ஆட்சிக்கு வந்து சில மாதங்களே ஆகின்றன’ என்பது மட்டுமே திமுக தரப்பின் பதிலாக இருந்தது. சரி அடுத்த வருஷம் என்ன செய்றாங்கன்னு பார்ப்போம் என்று காத்திருந்தன எதிர்க்கட்சிகள்.

ஆனால், இந்த முறை கடந்த மூன்று நாட்களாக சென்னையில் வடகிழக்கு பருவமழை அடித்து வெளுத்து வாங்கி வருகிறது. இருப்பினும், சென்னை உட்பட மாநிலம் முழுவதும் இந்த மழையிலும் எங்கும் பவர் கட் ஆகவில்லை என்று பெருமை பேசுகிறார் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

ஒரே நாளில் 10 செமீ மேவ் மழை பெய்த்திருநதாலும், சென்னையில் கடந்த ஆண்டைப்போல் மழைநீர் தேக்கம் பாதிப்பு இல்லை என்று தாக பேட்டி கொடுக்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.

கடந்த ஆண்டு மழைநீர் தேங்கிய இடங்களில் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்றதால், இந்த முறை மழைநீர் அதிகம் தேங்கவில்லை என்று பராக்கிரமாக உணர்ந்து பேசுகிறார் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு

இப்படி ஆளுங்கட்சி அமைச்சர்கள் ஆள் ஆளுக்கு பெருமை பேசிவர, சென்னை மாநகரின் மழை பாதிப்பு குறித்து எதிர்க்கட்சிகள் இதுவரை அவ்வளவாக குறைகளை முன்வைத்து திமுக அரசை விமர்சிக்கவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனும் இன்று மாலை தான் சென்னை மழை குறித்து வழக்கமான பாணியில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் முக்கியமாக, எந்தவொரு விவகாரத்திலும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை உண்டு, இ்லலை என ஆக்கும் விதத்தில் விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக பருவமழை பரவலாக கொட்டித் தீர்த்தும் வரும் நிலையில், அதன் பாதிப்புகள் குறித்து இதுவரை பேசாமல் இருப்பது அரசியல் அரங்கில் வி்யப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக அரசை விமர்சிக்க வேண்டும் என்றே கங்கணம்கட்டிக் கொண்டு பேசிவரும் அண்ணாமலையே, மழை பாதிப்புகள் குறித்து பேசவில்லை என்றால், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மழை முன்னெச்சரிக்க நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று நாம் தாராளமாக கருதலாம் என்கின்றனர் உடன்பிறப்புகள் சிலர்.

அதேசமயம், மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டதன் காரணமாக, சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இந்த முறை மழைநீர் தேங்கவில்லை என்பதுடன் சமாதானம் அடைந்துவிடாமல் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பிரதான சாலை ஒட்டியுள்ள நூற்றுக்கணக்கான தெருக்களின் சாலைகள் குண்டும், குழியுமாக மழைநீர் தேங்கிதான் உள்ளது.

இதேபோன்று தாழ்வான குடியிருப்புகளில் இந்த முறையும் வழக்கம்போல் மழை வெள்ளம் சூழ்ந்துதான் இருக்கிறது. இவற்றையெல்லாம் சரிசெய்யும் பொறுப்பும் தமிழக அரசுக்கே உள்ளது. அடுத்த ஆண்டு மழைக்குள் இவற்றை சரிசெய்துவிட வேண்டும் என்ற இலக்குடன் செய்யப்பட்டால், இந்த முறை சென்னை மழையில் ஸ்கோர் செய்வது போல், அடுத்த முறையும் மக்கள் மத்தியில் ஸ்டாலின் ஸ்கோர் செய்யலாம் என்ற யோசனையும் பலதரப்பினரும், திமுக நலவிரும்பிகளும் முன்வைக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.