சென்னை வந்துவிட்டு, ஸ்டாலினை பார்க்காமல் எப்படி செல்ல முடியும்! மம்தா பேட்டி

சென்னை: இல.கணேசன் அழைத்ததால் வந்தேன்; சென்னை வந்துவிட்டு, ஸ்டாலினை பார்க்காமல் எப்படி செல்ல முடியும்!”என முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறினார்.

மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநருமான இல.கணேசன் அண்ணனின் 80வது திருமண நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதில் கலந்துகொள்ளும்படி, மேற்குவங்க முதல்வர் மம்தாவுக்கு, அம்மாநில பொறுப்பு ஆளுநர் இல.கணேசன் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று, மம்தா பானர்ஜி நேற்று மாலை சென்னை வந்தார்.

சென்னை வந்ததும் மம்தா பானர்ஜி,  ஏற்கனவே அறிவித்திருந்தபடி முதல்வர் ஸ்டாலினை, அவரின் இல்லத்துக்கே சென்று நேரில் சந்தித்தார். அதைத் தொடர்ந்து, ஸ்டாலின் குடும்பத்தினரையும் மம்தா சந்தித்துப்பேசினார். இந்த சந்திப்பின் போது, கனிமொழி, டி.ஆர்.பாலு உள்பட திமுக முன்னணியினர் இருந்தனர்.

இதையடுத்து ஸ்டாலினும், மம்தாவும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசியஸ்டாலின், “கவர்னர் இல.கணேசன் இல்லத்தில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிக்கு வந்திருக்கக்கூடிய இந்தச் சூழ்நிலையில், என்னுடைய இல்லத்துக்கு வருகைதந்து மரியாதை சந்திப்புக்காக என்னைச் சந்திருக்கிறார் மம்தா. அதே நேரத்தில், என்னை மேற்கு வங்கத்துக்கு  விருந்தினராக வரவேண்டும்’ என்று அழைப்பு விடுத்திருக்கிறார். அந்த அழைப்பை நானும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். மேலும், இது மரியாதைச் சந்திப்புதான். தேர்தல் சந்திப்பு அல்ல. தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை. அரசியல் குறித்தும் எதுவும் பேசவில்லை” எனக் கூறினார்.

அதைத்தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, `ஸ்டாலின் என்னுடைய சகோதரர் போன்றவர். குடும்ப நிகழ்ச்சி தொடர்பாக கவர்னர் விடுத்த அழைப்புக்காகச் சென்னை வந்திருக்கிறேன். சென்னை வந்துவிட்டு,  ஸ்டாலினைப் பார்க்காமல் நான் எப்படி சென்னையிலிருந்து செல்லமுடியும் என்றவர்,  இரண்டு அரசியல் தலைவர்களும் சேர்ந்து அரசியலைத் தவிர வேறு விஷயங்களைப் பற்றியும் பேசலாம், நாங்கள் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. அரசியலைவிட வளர்ச்சி முக்கியம் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.