அண்டை நாடான இலங்கை, 1948 ஆம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதனால், கடனில் மூழ்கியிருந்த இலங்கையின் ஆதிக்கம் செலுத்தி வந்த ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. அதனை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்ற பின்பும் நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை.
இலங்கை கடந்த சில வருடங்களாக பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பில் வரலாறு காணாத பற்றாக்குறையால் இந்த ஆண்டு ஆழ்ந்த நிதி நெருக்கடியின் பிடியில் உள்ளது. இதனால் இங்கு பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு, மருந்துகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூட பணம் கொடுக்க முடியாமல், இலங்கை திணறும் நிலை உருவாகியுள்ளது. பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, மக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல், கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது, மீண்டும் மக்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு வீதிகள் மீண்டும் போராட்டக்காரர்களால் நிரம்பி வழிகின்றன. வரும் நவம்பர் 14ம் தேதி புதிய அதிபர் ரணில் விக்கிரமசிங்க தனது முதலாவது பட்ஜெட் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளார். இதனை அடுத்து நிதி நெருக்கடியில் உள்ள மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் வரியை குறைக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதை கைவிட வேண்டும் என்றும், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB), தொழிற்சங்கங்கள் மற்றும் தீவிர இடதுசாரிக் கட்சிகள், பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தன. ஆனால், இலங்கைப் போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி நடத்த திட்டமிடப்பட்ட இடத்திற்குச் செல்வதைத் தடுத்தனர்.
மேலும் படிக்க | ட்விட்டரில் ப்ளூ டிக் பெற $8 கட்டணம்.. எலான் மஸ்க் அதிரடி!
முன்னதாக, ஜூலை மாதம் இலங்கையில் போராட்டங்கள் உச்சத்தில் இருந்தன. இதை அடுத்து முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரது வீடு மற்றும் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அதன் பிறகு அவர் ராஜினாமா செய்தார். நாட்டின் புதிய அதிபர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். தற்போது பட்ஜெட்டை தாக்கல் செய்ய தயாராகி வருகிறார். இலங்கை கடந்த 70 வருடங்களில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இலங்கை பொருளாதார நெருக்கடியால் இந்தியாவில் அதிகரிக்கும் இலங்கை அகதிகளின் வரத்து
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ