புதுச்சேரி : அமைச்சக ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மணி நேர வெளிநடப்பு மற்றும் தர்ணா போராட்டம் நடந்தது.
புதுச்சேரி, மிஷன் வீதி சம்பா கோவில் எதிரே நடந்த போராட்டத்திற்கு முருகவேல் வரவேற்றார். சேஷாச்சலம் தலைமை தாங்கினார். கூட்டு போராட்ட குழு நிர்வாகிகள் ஆனந்தராஜன், கோவிந்தராஜ், பரசுராமன், செல்வம், புகழேந்தி வாழ்த்தி பேசினர்.
நிர்வாகிகள் ராமமூர்த்தி, செந்தில்குமார், மணிகண்டன் முன்னிலை வகித்தனர். தங்கதுரை, சிவக்குமார், சக்கரவர்த்தி, வினோத், விஜயகுமார், திலகர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
போராட்டத்தில் அமைச்சக உதவியாளர் பணியினை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதை உடனடியாக கைவிட வேண்டும். 100 சதவீதம் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வின் மூலம் நிரப்ப அமைச்சக உதவியாளர் பணி நியமன விதி-2012 திருத்தம் செய்ய வேண்டும்.
அமைச்சக உதவியாளர் மற்றும் மேல்நிலை எழுத்தர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் உடனடியாக நிரப்பிட ஆவண செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement