கனடாவில் பிறந்தவர் இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த சன்னிலியோன். இவர் ஆபாச படங்களில் நடித்து உலக புகழ்பெற்றவர். ஆனால் அதனைத் தொடராத அவர் அதிலிருந்து வெளியேறினார். அதன் பிறகு பாலிவுட்டில் சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து தமிழிலும் தலை காட்ட ஆரம்பித்தார். அப்படி அவர் ஜெய் நடிப்பில் வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.
தொடர்ந்து, நடிகர் சதீஷுடன் இணைந்து ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் அவர் லீட் ரோலில் நடித்திருக்கிறார். ராணியாக நடித்திருக்கும் சன்னி லியோனுடன் ஜிபி முத்துவும் நடித்துள்ளார். படத்தில் யோகிபாபு, ரமேஷ் திலக், ரவி மரியா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
#OhMyGhost #OMG #OMGSecondLook
Starring @actorsathish & @SunnyLeone pic.twitter.com/GPKkZMyO1T
— Karthik Ravivarma (@Karthikravivarm) April 24, 2022
இந்தச் சூழலில் ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சன்னி லியோனும், ஜிபி முத்துவும் கலந்துகொண்டனர். இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜிபி முத்து சன்னி லியோன் குறித்து கலகலப்பாக பேசினார். மேடையில் பேசிய அவர், ”ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுதான் என்னுடைய முதல் படம்.
இயக்குநரிடம் நடிக்க பயமா இருக்குனு சொன்னேன். கவலைபடாதீங்க. சொல்ற படி நடிங்கனு இயக்குநர் சொன்னார். சன்னி லியோன்னு சொன்னாங்க.. அவங்க யாருனு அப்போது எனக்கு தெரியாது. நிறைய கமெண்ட்லாம் வரும். ஆனாலும் எனக்கு தெரியாது. இதுதான் சன்னிலியோன்னு சொல்லி சில படத்தையெல்லாம் காமிச்சான். அதாவது புகைப்படத்த காமிச்சாங்க”என்றார்.