14 நாளில் அபராதத்தை கட்டாவிடில் வாகனங்கள் ஏலம்! போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை…

சென்னை: விதிமீறல் காரணமாக பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு, அடுத்த 14 நாளில் அபராதம் கட்டி  வாகனங்களை மீட்காவிட்டால், அந்த வாகனங்கள் ஏலம் விடப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகள், 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தவில்லையென்றால், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் போக்குவரத்து விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய விதிகள்  26-ந்தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. அதன்படி, இருச்சக்கர வாகனங்களில்  ஹெல்மெட் இல்லாமல் சென்றால் ரூ.1000, ஒரு வாகனத்தில் 3 பேர் சென்றால் ரூ. 1000, செல்போன் பேசிக்கொண்டே சென்றால் ரூ. 1000, மீண்டும் அதேதவறை செய்தால் ரூ. 5000, லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டினால் ரூ. 5000, கார்களில் சீட்பெல்ட் அணியாவிட்டால் ரூ. 1000, நோபார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்தினால் ரூ. 500, மீண்டும் அதே தவறை செய்தால் ரூ. 1500, ஆட்டோக்களில் சீருடை அணியாவிட்டால் ரூ. 500, அதிகபாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ரூ. 500 என அபராத தொகை ஒவ்வொரு வாகனத்திற்கு ஏற்றபடி வகைப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னையில்,  நாள்தோறும் முக்கிய சாலை சந்திப்புகள் தேசிய நெடுஞ்சாலைகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெல்மெட் அணியாவர்கள்,  மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை குறிவைத்து மடக்கி அபராதம் வசூலிக்கின்றனர். அபராதம் அதிகம் என்பதால், பலர் பணமில்லை என்று கூறி வாகனத்தை காவல்துறையினரிடமே கொடுத்துவிட்டு சென்று விடுகின்றனர்.

இந்த நிலையில், விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள், அடுத்த 14 நாளில் அபராதம் கட்டாவிடில் அவர்களது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக், குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகள், 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தவில்லையென்றால், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதத் தொகை செலுத்தாத 50 வாகன ஓட்டிகளின் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்திற்கு விட இருப்பதாக போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.