குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 14-ந் தேதி அறிவித்தது. அதன்படி இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குஜராத் சட்டப் பேரவைக்கு டிசம்பர் 1,5-ஆம் தேதிகளில் தேர்தல் இரண்டு கட்டங்களாகத் தேர்ல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.,தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றைக்கே அறிவிக்கப்படுகிறது.
குஜராத் மாநில சட்டப் பேரவையின் தற்போதைய பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
2017-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 99 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 77 இடங்களையும் கைப்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது