’நீயே காரை ஓட்டு’.. ஜகா வாங்கிய மணமகன்.. மணப்பெண்ணின் டிரைவிங்கால் பறிபோன உயிர்!

வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என தொடர்ந்து எடுத்துரைத்து வந்தாலும் இந்த வழக்கம் இதுகாறும் பழக்கத்தில் இருந்துதான் வருகிறது. இப்படி இருக்கையில் வரதட்சணையாக கொடுக்கப்பட்ட காரால் மணப்பெண்ணின் உறவினர் பலியான சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியிருக்கிறது.
கான்பூரை அடுத்த எடாவாஹ் மாவட்டத்தில் உள்ள அக்பர்புர் கிராமத்தில் 24 வயதான அருண் குமார் என்பவருக்கும், அவுரையா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடக்க இருந்திருக்கிறது. அப்போது மணப்பெண் வீட்டார் சார்பில் மணமகனுக்கு காரை வரதட்சணையாக திருமணத்திற்கு முன்பு திலக் சடங்கின் போது வழங்கப்பட்டிருக்கிறது.
image
ஆயுதப்படையில் காவலராக இருக்கும் அருண் குமாருக்கோ கார் ஓட்டுவதில் பயிற்சி பெற்றிருக்கவில்லை. இருப்பினும் மணப்பெண் வீட்டார் கொடுத்ததால் அவர்களுக்காக காரை ஓட்டி பார்த்திருக்கிறார். ஆனால் காரை பின்னால் இயக்கும் போது பிரேக்கை அழுத்தாமல் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தப்போய், அங்கிருந்த உறவினர்கள் மீது மோதியிருக்கிறது.
இதில் அருண் குமாரின் 35 வயது அத்தையான சர்ளா தேவி என்பவர் சம்பவ இடத்திலேயே காரில் நசுங்கி பலியாகியிருக்கிறார். அதேபோல 10 வயது சிறுமி உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
image
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் விபத்து நிகழ காரணமாக இருந்த மணமகன் அருண் குமாரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இது தொடர்பாக பேசியுள்ள காவல்துறை அதிகாரி ஏக்தில், “சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து புகார் வந்ததும் அருண் குமார் மீது கவனக்குறைவு, அவசரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் மரணத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.” எனக் கூறியிருக்கிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.