இன்று பெப்சி தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவரும், திரைப்பட இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது,
“நம்மகிட்ட உள்ளத்துலயே மிக உயர்வானது என்றால் அது சுதந்திரம் தான். அது நம்ம கிட்ட இருக்கும்போது அதோட அருமை தெரியாது. அது இல்லாதபோது தான் அதோட அருமை தெரியும். பல நூற்றாண்டுகள் ஆனால் கூட மகாத்மா காந்தியை யாரும் மறக்க மாட்டாங்க. திருப்பூர் குமாரனையும் யாரும் மறக்க மாட்டாங்க. ஒருத்தர் சரித்திரம் படைப்பதற்கு என்ன வேண்டும் தெரியுமா? சமூகத்திற்கான போராட்டம் வேண்டும்.
இதையடுத்து, நாங்கள் திருப்பூர் குமரனின் வீட்டுக்கு போனோம். திருப்பூர் குமரன் வாழ்ந்த வீடு 10-க்கு 10-தான் இருக்கும். அந்த 10-க்கு 10 உள்ள வீட்ல இருந்து வாழ்ந்து, இன்னைக்கு சுமார் 100 ஆண்டுகள் கழிச்ச பிறகும் கூட, அந்த இடத்தைத் தேடி எல்லாரையும் வர வைக்கிறது தான் சரித்திரம் படைத்த மனிதனுடைய சாதனை.
அப்போ சாதனை படைப்பதற்கு 10 ஏக்கர் வீடு இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. 10-க்கு 10 வீடு இருந்தா கூட போதுமனது தான். அந்த சாதனையை நம்மால் படைக்க முடியும் என்று மாணவர்கள், குழந்தைகள் என்று எல்லோரும் தெரிஞ்சிக்க வேண்டும். நம்மளுடைய உழைப்பு நமக்கானதாகவும் நமது சமூகத்திற்கானதாகவும் இருக்கும் வரை நமது பெயர் சரித்திரத்தில் ஏறிக்கொண்டே தான் இருக்கும்” என்றுத் தெரிவித்துள்ளார்.