ஆமதாபாத், பெண் உரிமை ஆர்வலரும், ‘சேவா’ எனப்படும் சுயதொழில் செய்யும் பெண்கள் சங்க நிறுவனருமான எலா பட், 89, உடல்நலக் குறைவால் காலமானார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரைச் சேர்ந்த எலா பட், பெண்கள் உரிமைக்காக போராடியவர்.
பெண்கள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு சேவா என்ற சங்கத்தை துவக்கி, அதன் வாயிலாக ஏராளமான பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த எலா பட், நேற்று காலமானார். அவரது மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement