பிரியாணி ஆர்டர் கொடுப்பதுபோல் நடித்து கல்லா பெட்டியில் மொத்த பணத்தையும் திருடிய நபர்!

சென்னை பூவிருந்தமல்லி அருகே பிரியாணி ஆர்டர் கொடுப்பது போல் நடித்து ஓட்டல் கல்லா பெட்டியில் இருந்து ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை நபர் ஒருவர் தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூவிருந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, பூந்தமல்லி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை ஊழியர் ஒருவர் ஓட்டலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், பிரியாணி ஆர்டர் கொடுக்க வேண்டும் என ஊழியரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, கடை உரிமையாளரிடம் பேச வேண்டும் என கூறியுள்ளார்.
image
இதனைத் தொடர்ந்து அந்த ஊழியர் உள்ளே சென்ற நேரத்தில், கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.25000 பணத்தை எடுத்து கொண்டு அந்த நபர் தயாராக வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்றார். இதையடுத்து அந்த நபரை பிடிக்க சென்றபோதும் அந்த நபர் வேகமாக தப்பி சென்றார்.
இதுகுறித்து நசரத்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் பணத்தை திருடிச் சென்ற நபர் யார் என்பது குறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். காவல்நிலையம் அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.