கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த எரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவர் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியை சேர்ந்த உறவினர் பெண்ணான 9ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார்.
இருவரின் காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. பின்னர் இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 10 நாட்களுக்கு முன்பு சௌந்தர்ராஜன் தனது காதலியை தனது வீட்டிற்கு கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவியின் பெற்றோர் கர்நாடக மாநிலம் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கர்நாடகா போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி காதல் ஜோடி இருவரும் சூளகிரி அடுத்த எரண்டப்பள்ளி கிராமத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தனர். அப்பகுதி மக்கள் உடனடியாக இருவரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சூளகிரி போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காதலன் செளந்தர்ராஜன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in