வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே இறைவன் அருளால் இன்னொரு வாழ்க்கை கிடைத்துள்ளது. மீண்டும் வலிமையான போராட்டம் நடத்துவேன் என இம்ரான் கான் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் வஜீராபாத்தில் அரசுக்கு எதிராக நடக்கும் பேரணியில் பங்கேற்க வந்த கன்டெய்னரை குறிவைத்து ஒருவன் துப்பாக்கியால் பல முறை சுட்டார். அதில் , இம்ரான் கான் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக சாலை மார்க்கமாக லாகூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்தார். இன்னும் சிலர் காயமடைந்துள்ளனர். அதில், முன்னாள் அமைச்சர் பாவத் சவுத்ரியும் ஒருவரும் அடக்கம். துப்பாக்கிச்சூடு நடத்திய உடன், இம்ரான் கான் ஆதரவாளர்கள், அந்த நபரை தாக்கி போலீசிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், அவரும் சுட்டு கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இம்ரான் அறிக்கை
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இம்ரான் கான் வெளியிட்ட அறிக்கையில், இறைவன் அருளால் இன்னொரு வாழ்க்கை கிடைத்துள்ளது. மீண்டும் வலிமையுடன் போராடுவேன் எனக்கூறியுள்ளார்.
கண்டனம்
இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து உடனடியாக அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement