புதுடில்லி,:ஹூண்டாய் நிறுவனம், ‘ஏ.ஐ., 3’ எனும், புதிய மினி எஸ்.யூ.வி., காரை, 2023ம் ஆண்டில் களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கார் சந்தையில், விற்பனையில் சிறந்து விளங்கி வரும் ‘டாடா பஞ்ச்’ காருக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஏ.ஐ., 3 கார், உலகளவில் பல நாடுகளில் இயங்கி வரும், ‘ஹூண்டாய் கேஸ்பர்’ காரின் வடிவத்தை போன்று, ஆனால், அதை விட அளவில் பெரிதாக இருக்கும் என்றும், ‘கிராண்ட் ஐ10’ உருவாக்கு தளத்தில் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
சிறப்பம்சங்கள்:
இன்ஜின் : 1.2 லிட்டர் பெட்ரோல்
டார்க் : 114 என்.எம்
ஹார்ஸ் பவர் : 83 பி.எஸ்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement