சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகளான தினேஷ் (23) (எ) பீடி தினேஷ் மற்றும் முகமது அஜீம் (22) ஆகியோர் பழைய குற்ற வழக்கில் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தனர்.
இந்த நிலையில் இருவரும் போரூர் பெருமாள் கோவில் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்கள் தங்கி இருந்த வீட்டை போலீசார் சோதனை செய்தபோது ஐந்து நாட்டு வெடிகுண்டுகள், பட்டா கத்தி ஒரு கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தனசேகர் என்பவரை கொலை செய்வதற்காக திட்டமிட்டதும் அதன்பேரில் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்திகள் வாங்கி பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி இரவு நுங்கம்பாக்கம் குளக்கரை தெருவில் அதே பகுதியைச் சேர்ந்த குமார் (எ) குள்ள குமாரை, தனசேகர் (எ) சாம்பார் தனசேகர் மற்றும் அவரது நண்பர்களான பார்த்திபன், ராஜா ஆகியோர் சேர்ந்து வெட்டி படுகொலை செய்தனர்.
தனது நண்பரான குள்ள குமாரை கொலை செய்த தனசேகரை கொலை செய்வதற்காக பீடி தினேஷ் திட்டமிட்டு நண்பரான முகமது அஜீமை கூட்டு சேர்த்துக் கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
newstm.in