தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை செய்யுது வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கோயம்பேடு – விமான நிலைய வழித்தடத்தில் பாதிப்படைந்துள்ளது.
சென்னை கோயம்பேடு முதல் செயிண்ட் தாமஸ் மவுண்ட் இடையிலான மெட்ரோ ரயில் சேவையில் இன்று மாலை 6 மணியளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் பயணிகள் பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதாக புகார்களை பதிவிட்டனர். மழை நேரம் என்பதால் மெட்ரோ ரயிலில் பயணிக்கவே மக்கள் அதிகம் முற்படுவார்கள். அதனால், மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
இதனையடுத்து இந்த புகார்கள் குறித்து மெட்ரோ ரயில் நிர்வாக தரப்பில் அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில், ‘’ கோயம்பேடு மற்றும் செயின்ட் தாமஸ் மவுண்ட் இடையே உயர் அழுத்த மின் கேபிளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, மெட்ரோ ரயில் சேவைகள் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு வழித்தடத்தில் மட்டுமே இயக்கப்படுகின்றன.
கோயம்பேடு மற்றும் செயின்ட் தாமஸ் மவுண்ட் (கிரீன் லைன்) இடையே OHE-ல் ஏற்பட்ட கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவைகள் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் டவுன்லைனில் (சிங்கிள் லைன்) இயக்கப்படுகின்றன. இதனால் சென்ட்ரல் மற்றும் ஏர்போர்ட் இடையேயான இன்டர்காரிடர் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பசுமை வழித்தடத்தில் விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகள், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்திற்குப் பயணிக்க வேறுமாற்றம் செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சென்ட்ரல் மற்றும் ஏர்போர்ட் இடையேயான சுரங்க ரயில் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
எங்களது பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். எங்களது சேவைகளை மீட்டெடுக்க எங்கள் குழுக்கள் போர்க்கால அடிப்படையில் செயல்படுவதால், பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரம் மட்டுமே வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த மெட்ரோ ரயில் சேவை தொடர்பான தகவல்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் சேவையில் ட்விட்டர் பக்கத்தை பின் தொடரவும்..
CMRL regrets the inconvenience caused to its passengers and request to cooperate as our teams are working on war footing basis to restore the services.
Thank you
3/3
— Chennai Metro Rail (@cmrlofficial) November 3, 2022
இதையும் படியுங்கள் – வெந்நீர் அல்லது குளிர்ந்த தண்ணீர்.. எதில் குளிப்பதில் நன்மை அதிகம்? – ஓர் குளுகுளு பார்வை! Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM