புதுச்சேரி : சபரிமலை மண்டல பூஜைக்கு பக்தர்கள் பயணம் செய்யவதை முன்னிட்டு 5 மாநில அமைச்சர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து போக்குவரத்து அமைச்சர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு யாத்திரை சீசன் வரும் 17 ம் தேதி துவங்குகிறது. அதனையொட்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கூட்டு கூட்டம் காணொளி மூலம் நடந்தது.
ஐயப்ப பக்தர்கள் யாத்திரையை பாதுகாப்பாக வழி நடத்துவதற்காக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் புதுச்சேரி அரசு சார்பில் போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா, இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement