புதுடெல்லி: கோவிட் மற்றும் இன்ஃப்ளூயன்சா என இரு நோய்களுக்கான ஒற்றைத் தடுப்பூசி… எம்ஆர்என்ஏ-அடிப்படையிலான தடுப்பூசி, மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்கும் கட்டத்திற்கு வந்துவிட்டது. அமெரிக்காவில் 180 பங்கேற்பாளர்களுடன் இந்த ஆய்வு தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபைசர்-பயோஎன்டெக் நிறுவனங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன, ஒருங்கிணைந்த கொரோனா வைரஸ் மற்றும் காய்ச்சல் தடுப்பூசி சோதனை செய்யப்படும், இது இரு நோய்களும் ஏற்படாமல், மக்களை பாதுகாக்கும் தடுப்பூசி விகிதங்களை அதிகரிக்க வழிவகுக்கும்.
எம்ஆர்என்ஏ-அடிப்படையிலான இந்த ஒருங்கிணைந்த தடுப்பூசியானது, தயாரிக்கப்பட்டு மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்கும் கட்டத்திற்கு வந்துவிட்டதாக ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் 180 பங்கேற்பாளர்களுடன், தடுப்பூசி அடுத்தக் கட்ட ஆய்வுக்கு முன்னேறுகிறது.
தடுப்பூசி “இந்த இரண்டு சுவாச நோய்க்கிருமிகளுக்கு எதிரான நோய்த்தடுப்பு நடைமுறைகளை எளிதாக்கலாம், இரண்டு நோய்களுக்கும் சிறந்த தடுப்பூசி பெற வழிவகுக்கும்” என்று அமெரிக்க மருந்து தயாரிப்பாளரான ஃபைசரின் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தலைவர் அன்னலீசா ஆண்டர்சன் கூறினார்.
மேலும் படிக்க | குரங்கம்மை முடிவுக்கு வரவில்லை: அவசர சுகாதாரநிலை பட்டியலில் தொடரும் Monkeypox
“தற்போதுள்ள பருவகால இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டாலும், இன்ஃப்ளூயன்ஸா வைரஸின் சுமை உலகம் முழுவதும் அதிகமாக உள்ளது, இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இறப்புகள் ஏற்படுகின்றன. கணிசமான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்” என்று ஃபைசரின் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தலைவர் அன்னலீசா ஆண்டர்சன் தெரிவித்தார்.
கோவிட்-19 நோயை எதிர்த்துப் போராடுவதற்கான மிகவும் பிரபலமான தடுப்பூசிகளில் ஒன்று ஃபைசர் மற்றும் அதன் ஜெர்மன் கூட்டாளியான பயோஎன்டெக் மூலம் உருவாக்கப்பட்டது.
அதேபோல், தடுப்பூசி தயாரிப்பாளர்களான மாடர்னா மற்றும் நோவாவாக்ஸ் ஆகியவை, காய்ச்சல் மற்றும் கோவிட் தடுப்பூசிகளைதயாரித்து ஒன்றாகச் சோதித்துள்ளன.
மேலும் படிக்க | மீண்டும் இலங்கையில் நெருக்கடி; வீதிகளில் திரளும் மக்கள்; ஒடுக்க நினைக்கும் அரசு!
மேலும் படிக்க | பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ