அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான விசாரணை பூர்த்தி செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட திருத்த சட்டமூலம் அரசியல் யாப்புக்கு உட்பட்டதா? என்பது தொடர்பான உயர் நீதி மன்றத்தின் நிலைபாடு பாராளுமன்றத்தின் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்த நீதிமன்ற விசாரணை இரண்டாவது நாளான நேற்று (03) பிரதம நீதியரசர்களான புவனகே அலுவிகார முர்து பெர்னாண்டோ மற்றும் ஜகத் டி சில்வா ஆகியோரை கொண்ட மூவர் அடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில நடைபெற்றது.
விடயங்கள் தொடர்பில் நீண்ட விசாரணைக்குப் பின்னர் நேற்று வாய் மூலமான சமர்ப்பணமும் நிறைவு செய்யப்பட்டது.
மனுக்களுக்கு அமைவாக எழுத்து மூலமான சமர்ப்பணங்களை இன்று சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதனைதொடர்ந்து குறிப்பிட்ட சட்டமூலம் அரசியில் யாப்புக்கு உட்பட்டமை தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் நிலைபாடு சபாநாயகருக்கு அறிவிக்கப்படவுள்ளது.
குறிப்பிட்ட சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி ,இலங்கை நீதிமன்ற அதிகாரிகளின் சங்கம் உள்ளிட்ட 8 தரப்பினரால் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட திருத்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்ட சரத்துக்களினால் அரசியல் யாப்பை மீறப்படவில்லை என்ற தீர்மானத்தை வழங்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பாலித்த ரங்கே பண்டார மற்றும் அதன் உப தலைவர் அகில விராஜ் காரியவசம் ஆகியோரினால் இடைக்கால மனுவொன்று உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளளமை குறிப்பிடத்தக்கது.