ஜம்மு : ஜம்மு – காஷ்மீரில் வெளிமாநிலம் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு – காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள போந்தியால்காம் என்ற இடத்தில் எஸ்.ஏ.பி.எஸ்., என்ற தனியார் பள்ளியில் பயங்கரவாதிகள் நேற்று துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
அப்பள்ளியின் ஊழியர்களான பீஹார் மாநிலத்தை சேர்ந்த ஒருவரும், நம் அண்டை நாடான நேபாளத்தை சேர்ந்த ஒருவரும் பலியாகினர்.
இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே, பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே, ஊடுருவ முயன்ற மூன்று பயங்கரவாதிகளை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
இதில், ஒருவரின் உடலை படையினர் மீட்டு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் கைப்பற்றினர்.மற்ற இரு உடல்களையும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மீட்டுச் சென்றனர். அங்கும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement