மத்திய கல்வி அமைச்சகத்தின் 2020-21ஆம் ஆண்டிற்கான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்பாட்டு வரிசை குறியீட்டில் தமிழகம், புதுச்சேரி மூன்றாவது நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தரவரிசை குறியீட்டை மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள ஆயிரம் புள்ளிகளில் 950-க்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நிலை1 என்ற உயரிய மதிப்பைப் பெற்றுள்ளன. 551க்கும் குறைவான புள்ளிகளைப் பெற்றுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 10-வது நிலையில்
வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த செயல்பாட்டு வரிசை குறியீட்டின்படி தமிழகம், புதுச்சேரி ஆகியவை முறையே 855 மற்றும் 897 புள்ளிகளோடு மூன்றாவது நிலையில் உள்ளன. அனைத்து நிலைகளிலும் பள்ளிக்கல்வி அமைப்புமுறை விரைவான முன்னேற்றம் அடைவதை உறுதி செய்வதற்கு இந்தக் குறியீடு உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM