புதுச்சேரி: புதுச்சேரி – கடலூர் தேசிய நெடுஞ் சாலை, தொடர் மழையால் படுமோசமான நிலைக்கு மாறியுள்ளது.
புதுச்சேரி – கடலுார் தேசிய நெடுஞ்சாலை, புதுச்சேரியை, தமிழக கிழக்கு கடற்கரை மாவட் டங்களுடன் இணைப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தச் சாலையில் தினமும் பல்வேறு தேவைகளுக்காக, புதுச்சேரியில் இருந்து கடலூருக்கும், அங்கிருந்து புதுச்சேரிக்கும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இச்சாலை சீரமைக்கப்படாமல், விபத்துகள் அதிகரித்தது.
இதைத்தொடர்ந்து கடந் தாண்டு, புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை சார்பில் ‘பேட்ஜ் ஒர்க்’ செய்யப்பட்டது. அது நீண்ட நாட்களுக்கு தாக்குப்பிடிக்காமல் சாலை கந்தலானது. இந்தச் சாலையை சீரமைக்க புதுச்சேரி அரசின் கோரிக்கையை ஏற்று, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், நிதி வழங்க ஒப்புதல் அளித் தது.
புதுச்சேரி இந்திரா காந்தி சிலையிலிருந்து தவளக்குப்பம், முள்ளோடை வரை உள்ள புதுச்சேரி-கடலூர் தேசிய நெடுஞ்சா லையை, ரூ.17.98 கோடி மதிப்பில் மேம்படுத்திய சாலையாக அமைக்க, புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை கோட்டம் மூலம் முடிவு செய்யப் பட்டது. இதற்காக, கடந்த செப்டம்பர் 29-ம் தேதி தவளக்குப்பம் கொருக் கன்மேடு பகுதியில் முதல்வர், சட்டப்பேரவை தலைவர், பொதுப் பணித்துறை அமைச்சர் ஆகியோர் பூமி பூஜை செய்தனர். அதன் பிறகு சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது பருவமழை தொடங்கி பெய்து வருவதால், புதுச்சேரி-கடலூர் சாலை படுமோசமான நிலைக்கு மாறியுள்ளது. சாலைநெடுகிலும் பள்ளங்கள் ஏற்பட்டுமரணக்குழிகளாக காணப்படுகின் றன. குறிப்பாக நோணாங்குப்பம் முதல் கிருமாம்பாக்கம் வரையில் சாலை போக்குவரத்துக்கு பயனற்றுள்ளது. 7 கி.மீ தூரம் கொண்ட இப்பகுதியை கடந்து செல்வது வாகன ஓட்டிகளுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது. குறிப்பிட்ட சில இடங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையே காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள்அச்சத்துடன் மரண பீதியில் சென்று வருகின்றனர்.
இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது,‘‘சாலை அமைக்க பூமி பூஜை செய்யப்பட்ட மறுநாளேபேட்ஜ் ஒர்க் பணி மேற்கொள்ளப் பட்டது. அதன்பிறகு மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. நிதி பிரச்சினை இல்லை. மழை நின்றவுடன் சாலை அமைக்கப்படும். தற்போது சாலையில் ஏற்பட்டுள்ள பள் ளங்களை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’என்று தெரிவித்தனர். சாலை நெடுகிலும் பள்ளங்கள் ஏற்பட்டு மரணக் குழிகளாக காணப்படுகின்றன.