புதுடில்லி : மேற்காசிய நாடான கத்தாரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற எட்டு அதிகாரிகள், மேற்காசிய நாடான கத்தாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.
இந்த தனியார் நிறுவனத்தின் வாயிலாக கத்தாரில் உள்ள பாதுகாப்பு படையினருக்கு பயிற்சி அளிப்பது தான், இவர்களது வேலை. இந்நிலையில் இந்த எட்டு பேரும் கத்தாரில் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது:
இந்தியர்கள் எட்டு பேரும் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரியவில்லை. அவர்களை பாதுகாப்பாக விடுவிப்பது தொடர்பாக கத்தாரில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள், அங்குள்ளவர்களுடன் பேச்சு நடத்தி வருகின்றனர். விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement