பயணிகளுக்கு குட் நியூஸ்.. குறைந்தது பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டணம்..!

பண்டிகை காலத்தையொட்டி 8 ரயில் நிலையங்களில் 20 ரூபாயாக உயர்த்தப்பட்ட பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டணம் மீண்டும் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தையொட்டி ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சென்னை சென்டிரல், எழும்பூர் உட்பட 8 ரயில் நிலையங்களில் 10 ரூபாயாக இருந்த பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டணம் 20 ரூபாயாக உயர்த்தப்பட்டிருந்தது.

இந்த நடைமுறை, அக்டோபர் 1-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று சென்னை ரயில்வே கோட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அந்த 8 ரயில் நிலையங்களின் பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டணம் 20 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை சென்டிரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டணம் 10 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணம் குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.