திருப்பதி : திருப்பதி மாவட்டத்தில் சாராயம் காய்ச்சும் கிராமங்கள் பசுமை மண்டலமாக மாற்றப்படும் என்று நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் வெங்கடரமணா தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில அரசு தலைமை செயலர் சமீர் சர்மா அனைத்து மாவட்ட கலெக்டர், இணை கலெக்டர்களுடன் கான்பரன்ஸ் மூலமாக நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதில், திருப்பதி கலெக்டர் அலுவலகத்திலிருந்து கலெக்டர் வெங்கடரமணா, இணை ஆட்சியர் பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, தலைமை செயலாளர் சமீர் சர்மா மாநிலத்தில் நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.தொடர்ந்து, கலெக்டர் வெங்கடரமணா பேசியதாவது: மாவட்டத்தில் நாட்டு சாராயம் உள்ள கிராமங்கள், குற்ற சம்பவங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கவனம் செலுத்தப்படும். இந்த கிராமங்களை பசுமை மண்டலமாக நாட்டு சாராயம் இல்லாத கிராமங்களாக கொண்டு வரப்படும்.
ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு மருத்துவமனை உள்கட்டமைப்பு, 4 ஆண்டுகளாக வளர்ச்சி குன்றிய நிலை உள்ளிட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளின் முன்னுரிமை குறிகாட்டிகள் குறித்து முதல்வர் ஆய்வு நடத்துகிறார். குழந்தைகள் மற்றும் மழலையர் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை குறைக்க கர்ப்பிணிகள், கைக்குழந்தைகள் மற்றும் இளம்பெண்களுக்கு ரத்தசோகையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அங்கன்வாடி மையங்கள், நல விடுதிகளை கண்காணிக்க வேண்டும்.
இன்றே பணிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அன்றைய தினம் முன்னேற்றம் அடைய வேண்டும். பாடசாலையில் மாணவர் சேர்க்கை மற்றும் இடைநிற்றல் எண்ணிக்கையை ஆய்வு செய்து, பள்ளியை விட்டு வெளியேறிய குழந்தைகள் மற்றும் பள்ளியின் முகம் தெரியாத குழந்தைகளை பதிவு செய்ய வேண்டும். நவரத்தினங்களின் ஒரு பகுதியாக ஏழைகள் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வீடு கட்ட சுய உதவிக்குழு கடன் தேவைப்படுபவர்களுக்கு உரிய நேரத்தில் கடன் வழங்க வேண்டும்.
மின், வடிகால், தண்ணீர் வசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஸ்லாப் மட்டம் மற்றும் கூரை மட்டத்தில் வீடு கட்ட உடனடியாக வழங்க வேண்டும். விருப்பத்தேர்வு 3ன் கீழ் உள்ள வீடுகளுக்கு, ஒப்பந்ததாரர்களுடன் கூடிய பெரிய லேஅவுட்களை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.