தூங்கி கொண்டிருந்த குடும்பத்திற்கு எமனாக மாறிய குளிர்சாதன பெட்டி..!!

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் கோதண்டராமன் நகரைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் உயிரிழந்து ஓராண்டு கடந்த நிலையில், அவரது துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் கிரிஜா (63), அவரது தங்கை ராதா (55), உறவினர் ராஜ்குமார் (48) ஆகியோர் 3 பேரும் துபாயில் இருந்து சென்னை வந்துள்ளனர்.

இவர்கள் மூவரும் நேற்றிரவு ஒரே அறையில் தூங்கிய நிலையில் அறையில் இருந்து புகையாக வந்துள்ளது. இதனால் பக்கத்து அறையில் தூங்கிய பார்கவி சந்தேகமடைந்து எழுந்து 3 பேரும் தூங்கிய அறையை திறக்க முயன்றுள்ளார். ஆனால் கதவை அப்போது திறக்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து பார்த்தபோது 3 பேரும் இறந்து கிடந்தனர். அப்போது அந்த அறையில் இருந்த குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்து ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரெப்ரிஜிரேட்டர் கம்ப்ரஸர் வெடித்து கேஸ் கசிவு ஏற்பட்டு 3 பேரும் தீயில் கருகி இறந்தது தெரிய வந்துள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாரதி, குழந்தை ஆராதயா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குளிர்சாதன பெட்டி வெடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் உயிரிழந்த வெங்கட்ராமனின் வீடு கடந்த ஒரு ஆண்டாக பூட்டிய நிலையில் இருந்துள்ளது. இதனால் ஒரு ஆண்டுக்கு பின் ஃபிரிட்ஜ் உள்ளிட்டவை பயன்படுத்தியதால், எதிர்பாராதவிதமாக விபத்து நிகழ்ந்துள்ளது என் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.