வருங்கால கணவரின் முதல் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய நடிகை ஹன்சிகா! வைரல் வீடியோ


ஹன்சிகா திருமணம் செய்யவுள்ள நபருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனதாக தகவல்.

வருங்கால கணவர் சோஹேலின் முதல் திருமணத்தில் ஹன்சிகா கலந்து கொண்ட வீடியோ காட்சி வைரல்.

நடிகை ஹன்சிகா திருமணம் செய்யவிருக்கும் தொழிலதிபருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும் அந்த திருமணத்தில் ஹன்சிகா பங்கேற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈஃபிள் கோபுரம் அருகே சமீபத்தில் தனது வருங்கால கணவரை நடிகை ஹன்சிகா அப்படி அறிமுகம் செய்து வைத்திருந்தார்.

இந்நிலையில், ஹன்சிகாவின் வருங்கால கணவரான சோஹேல் கத்தூரியாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆன அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஹன்சிகாவுக்கும் சோஹேல் கதூரியாவுக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

இந்நிலையில் ஹன்சிகாவின் தோழியை தான் சோஹேல் முன்னர் திருமணம் செய்திருக்கிறார்.
வேடிக்கை என்னவென்றால், தனது தோழியின் திருமணத்தில் நடிகை ஹன்சிகா கலந்து கொண்டு ஆடிப் பாடி மகிழ்ந்துள்ள காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

ரிங்கி என்பவருடன் சோஹேல் கதூரியாவுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. இருவரும் விவாகரத்து செய்த நிலையில், தற்போது ஹன்சிகாவை சோஹேல் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகிள்ளது. 

வருங்கால கணவரின் முதல் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய நடிகை ஹன்சிகா! வைரல் வீடியோ | Actress Hansika Fiance Sohael Relationship Love



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.