சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், தான்யா
அருள்நிதிக்கு திருப்பம் தந்த மவுனகுரு, பல விருதுகளை குவித்த மகாமுனி படங்களை இயக்கிய சாந்தகுமார் அடுத்த படத்தை இயக்குகிறார். இதனை டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி தயாரிக்கிறது. கதையின் முன்னணி கதாபாத்திரத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். சென்னையில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் அர்ஜூன் தாஸ், தான்யா தவிர ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் ஷங்கர், ஜி.எம்.சுந்தர், ரம்யா மற்றும் பலர் நடிக்கின்றனர். ஜி.ஆர்.என் சிவா ஓளிப்பதிவு செய்கிறார், தமன் இசை அமைக்கிறார். தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் அநீதி படத்தில் நாயகனாக நடிக்கும் அர்ஜூன் தாஸின் அடுத்த படம் இது. தான்யா தற்போது அகிலன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து மாயோன் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்.