300 கிலோ வெண்கல முருகர் சிலை மீட்பு

கோவை: கோவை உக்கடம் செல்வபுரம் பைபாஸ் ரோட்டை சேர்ந்தவர் பாஸ்கர் (45). இவர், வீட்டில் ஜோதிடம், மாந்திரீக பூஜைகள் செய்து வந்தார். இவர், சுவாமி சிலைகள் உரிய அனுமதியின்றி செய்து விற்பனை செய்வதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று இவர் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் முருகர் சிலை இருந்தது. 4 அடி உயரத்தில் 300 கிலோ எடையில் இருந்த இந்த சிலை, வெண்கலத்தில் செய்திருப்பதாக தெரிகிறது. சிலை பீடம் மற்றும் தாங்கும் பகுதி 100 கிலோ எடையில் இருந்தது. இந்த சிலையை விற்பனை செய்ய இவர் சிலரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார். ஐம்பொன் எனக்கூறி சிலையை 3 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இவர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. போலீசார் அனுமதியின்றி வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவர் வைத்திருந்த சிலையை போலீசார் மீட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.