மங்களூரு அருகே உள்ள பஜ்பே பகுதியில் மங்களூர் சர்வதேச விமான நிலையம் இயங்கி வருகிறது. இது கர்நாடகத்தில் பெங்களூரு விமான நிலையத்திற்கு அடுத்தப்படியாக உள்ளது.
இந்த நிலையில் மங்களூர் விமான நிலையம் என்ற பெயரை அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி முதல் `மங்களூரு சர்வதேச விமான நிலையம்’ ஆக மாற்றப்படுகிறது. மங்களூர் நகரின் பெயர் `மங்களூரு’ என்று மாற்றப்பட்டதை தொடர்ந்து `மங்களூரு சர்வதேச விமான நிலையம்’ என்று பெயர் மாற்றப்படுகிறது.
இந்த விமான நிலையத்தை நிர்வகிக்கவும், மேம்படுத்தவும் கடந்த அக்டோபர் மாதம் முதல் 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்தின் வசம் ஒப்படைக்கபட்டது குறிப்பிடத்தக்கது.