மத்தியப்பிரதேச மாநிலம் Shivpuri மாவட்டத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 8ஆயிரத்து 500 பக்கங்கள் அடங்கிய ஆவணங்களை மேளதாளங்கள் முழங்க மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு கொண்டு செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.
Bairad Nagar பஞ்சாயத்தைச் சேர்ந்த Makhan Dhakad என்ற சமூக ஆர்வலர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த பஞ்சாயத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பான விவரங்களை தருமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து இருந்தார்.
சுமார் 12ஆயிரம் பக்கங்கள் அடங்கிய ஆவணத்திற்கு 25ஆயிரம் ரூபாய் டெபாசிட் கட்டியும் முழுமையான விவரங்கள் அவருக்கு வழங்கப்படவில்லை.