நடிகர் விஜய் படம் ரிலீஸ் பற்றி குட்டி ஸ்டோரி சொன்ன இபிஎஸ்!

சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி ஒரு நடிகர் தனது படம் ரிலீசாக உதவி கேட்டது குறித்து பேசியுள்ளார். அப்பொழுது நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது “அரசியல் என்பது முட்களும், மேடு பள்ளங்களும் நிறைந்த பாதை. 

அதில் பயணம் செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. இப்போதெல்லாம் செய்திகள் உடனுக்குடன் போகவில்லை பேசிக்கொண்டிருக்கும் பொழுது மக்களிடத்தில் செல்கிறது. சிறு பிரச்சனை என்றாலும் கூட அதனை பூதாகரமாக்கி பிரச்சனையை பெரிதாக்கி விடுவார்கள். அதன் காரணமாக பொதுவெளியில் பேசும் பொழுது கவனமாக பேசு வேண்டும், நடந்து கொள்ள வேண்டும்.  

ஒரு சிறந்த நடிகர் அவரின் பெயரைச் சொல்வது சரியாக இருக்காது. ஏனென்றால் உதவி கேட்டு வந்தவரின் பெயரை சொல்லக்கூடாது, இதுவரை அவரின் பெயரை சொல்லவில்லை, இனிமேலும் சொல்ல மாட்டேன். அவர் ஒரு சிறந்த நடிகர் மக்களிடத்திலே அதிக செல்வாக்கு கொண்டவர். அதிக ரசிகர் பட்டாளம் கொண்டவர். அவருடைய படம் மறுநாள் வெளியிட வேண்டும். ஆனால் அவருடைய படத்தில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கான சான்றிதழ் பெற வேண்டும். அதற்காக உதவி கேட்டு என்னை வந்து சந்தித்தார்.

அவருடன் படத்தின் தயாரிப்பாளரும் வந்திருந்தார். தற்பொழுது நீங்கள் முதலமைச்சராக இருக்கிறீர்கள், தயவு செய்து சான்றிதழ் பெற வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால் அன்றோ ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை. இதனால் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. படக்குழு தரப்பிலிருந்து படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டதால் பிரச்சனை ஆகிவிடும் என்றனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் என என்னிடம் கேட்டனர். இதனை அடுத்து அப்போதைய தமிழக தலைமைச் செயலாளர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொலைபேசி மூலம் மத்திய அரசு அதிகாரிகளுடன் பேசி அவருடைய படத்திற்கு அனுமதி பெற்று தந்தார்கள். இதனால் மறுநாளே படம் வெளியானது. உதவி என கேட்டு வந்தவர்க்கு மறுக்காமல் செய்து கொடுத்தோம்” என எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.

மெர்சல் படத்தில்ண காளை மாடு பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்த பொழுது நடிகர் விஜய் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமையை நேரில் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.