இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் அதிமேதகு சாண்டில் எட்வின் ஷால்க் அவர்கள் திங்கட்கிழமை (31) யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்திற்கு வருகை தந்த உயர் ஸ்தானிகர் மற்றும் குழுவினரை யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர வரவேற்றார்.
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுடன் இடம்பெற்ற சுமுகமான கலந்துரையாடலின் போது, சிவில்-இராணுவ ஒத்துழைப்பு, நல்லிணக்கம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் விசேட கவனம் செலுத்தும் படையினரின் தற்போதைய ஈடுபாடுகள் தொடர்பாக உயர் ஸ்தானிகர் கலந்துரையாடினார். யாழ். குடாநாட்டில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இராணுவத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அமுல்படுத்தப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி விளக்கமளித்தார்.
புறப்படுவதற்கு முன், தென்னாபிரிக்காவின் உயர் ஸ்தானிகர் யாழ். பொதுமக்கள் மத்தியில் அமைதி, ஜனநாயகம் மற்றும் நீதியை வலுப்படுத்துவதில் யாழ். பாதுகாப்பு படையினரின் முழுமையான அர்ப்பணிப்புக்காகப் பாராட்டி விருந்தினர் புத்தகத்தில் பதிவு செய்தார். பின்னர், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் தென்னாபிரிக்காவின் அதிமேதகு உயர்ஸ்தானிகர் ஆகியோர் நல்லெண்ணம் மற்றும் ஒத்துழைப்பின் அடையாளமாக நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.
இந்த சந்திப்பில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேணல் பொதுபணி அவர்களும் கலந்துகொண்டார்.