ஒரே நேரத்தில் வட கொரியாவின் 180 போர் விமானங்கள் நாட்டின் தெற்கு மற்றும் வடக்கு கடலோரப் பகுதிகளில் பறந்ததால் பதற்றம் அதிகரித்தது.
இதுகுறித்து தென் கொரிய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரிய போர் விமானங்கள் பறந்து சென்றது கண்டறியப்பட்டதால், அதனை எதிர்கொள்வதற்காக அதிநவீன எஃப்-35ஏ வகை போர் விமானங்கள் உட்பட 80 விமானங்களுடன் துரத்தி சென்றதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்க – தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சரமாரியாக ஏவுகணைகளை வீசி வட கொரியா சோதனை நடத்தி வருகிறது.